எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது... ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் பிரிந்திருக்க கூடிய சக்திகள் ஒன்றிணைய வில்லையென்றால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைப்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் இருந்து விலகிய, ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் புதிதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “புதிய அமைப்பை தொடங்கியவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும்” என்றார்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்

மேலும், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மக்கள், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு சுமார் 3.41 லட்சம் வாக்குகளை அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக் கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றித் தோல்வி என்பது சகஜம் தான். அதிமுகவை ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் தொண்டர்களின், தொண்டர்களுக்கான, மக்களுக்கான இயக்கமாகத் தான் வைத்திருந்தனர். மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து அதிமுகவின் தற்காலிக பொறுப்பை ஏற்றுள்ளவர்களிடம் தான் காரணம் கேட்க வேண்டும்.” என்றார்.

புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி
புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக முன்னாள் எம்.பி.யான ஜெயவர்தன் தோல்விடைந்தது குறித்தும் டெபாசிட் இழந்தது குறித்தும், அவரிடமும், அவருடைய தந்தையிடமும் தான் கேட்க வேண்டும் என்றார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முழுவீச்சாக செயலாற்றி பாஜகவின் வெற்றிக்காக அரும்பாடுபட்டார் என்பது மற்றொரு முக்கியமான காரணம்.

கட்சிகளின் தலைமையிடம் உள்ள ஜனநாயக பண்புகளை வைத்துதான் பொதுமக்கள் வாக்களிக்கின்றனர். பொதுமக்களின் அபிமானத்தை பெற்றவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவர். அதிமுகவில் பிரிந்திருக்க கூடிய சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in