கமல் - த்ரிஷா செல்ஃபி மொமண்ட்... ‘தக் லைஃப்’ அப்டேட்!

கமலுடன் த்ரிஷா
கமலுடன் த்ரிஷா
Updated on
1 min read

’தக் லைஃப்’ படப்பிடிப்புத் தளத்தில் கமலுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருக்கிறார் த்ரிஷா.

நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கமலுடன் கியூட்டான செல்ஃபி எடுத்து பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘உங்களுக்கு நல்லது நினைப்பவர்களை எப்போதும் கூடவே வைத்திருங்கள். தொடர்ச்சியாக அவர்கள் தான் உங்களை இன்ஸ்பையர் செய்வார்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் எனச் சொல்லி ஃபயர் விட்டு வருகின்றனர். கமலுடன் நடிகர் சிம்புவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

’நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல் - மணி ரத்னம் இணையும் படம் என்பதால் சீக்கிரம் படத்தின் அடுத்த அப்டேட்ஸ்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

'தக் லைஃப்’ படம் தவிர்த்து ‘விஸ்வாம்பரா’, ‘விடாமுயற்சி’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் த்ரிஷா. இதோடு ‘மூக்குத்தி அம்மன்2’விலும் இவரது பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in