"என் அப்பாவுக்காகத்தான் இதை செய்தேன். நான் பாடும்போது அவர் மகிழ்ச்சி அடைவதைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடையில், தனது தந்தையை சிறப்பிக்கும் வகையில் சில பாடல்களையும் தனது பேண்டுடன் சேர்ந்து பாடி அசத்தினார் ஸ்ருதி.
இது குறித்தான புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் அப்பாவுக்கு ட்ரிபியூட் தரும்படியான பாடல்களை ‘இந்தியன்2’ இசை வெளியீட்டு விழா மேடையில் பாடியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். நான் பாடும்போது, அவர் சிரிப்பதைப் பார்ப்பதற்கே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஏனெனில், அவரால்தான் இன்று இசைத்துறையில் இருக்கிறேன். குறுகிய காலத்திற்குள் பாடல்களை இசையமைத்து, தயார் செய்த என்னுடைய இசைக்குழுவுக்கு நன்றி” என நெகிழ்ந்துள்ளார்.
காதல் பிரேக்கப்பில் இருந்து மீண்டு வரும் ஸ்ருதிஹாசனிடம் விழா மேடையிலேயே கமல்ஹாசன், “ஸ்ருதி மனசு வைச்சா நான் சீக்கிரம் தாத்தா தான்” என்று பேசி கலகலப்பாக்கினார்.
இதையும் வாசிக்கலாமே...
கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!
5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!
மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!