நான் பாஜகவில் சேர்ந்தபோது தவறான முடிவெடுத்து விட்டதாக கூறினார்கள்: நமீதா பரபரப்பு!

நான் பாஜகவில் சேர்ந்தபோது தவறான முடிவெடுத்து விட்டதாக கூறினார்கள்: நமீதா பரபரப்பு!

"பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். வேறு வழியில்லை” என்று நடிகை நமீதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகையும் பாஜக நட்சத்திர பேச்சாளருமான நமீதா இன்று புதுச்சேரியில் தனியார் ரிசார்ட் ஒன்றின் திறப்பு விழாவிற்காக சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியபோது பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, “தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. இது ஒரு மாநிலத்திற்கான தேர்தல் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தேர்தல். மக்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டனர். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் பாஜகவில் சேர்ந்தபோது நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்று பலரும் கூறினார்கள்.

நமீதா
நமீதா

ஆனால், சரியான முடிவெடுத்துவிட்டேன் என உறுதியாக நம்பினேன். பாஜக ஆட்சியால்தான் நாடு நல்ல நிலையில் முன்னேறி உள்ளது. இனியும் முன்னேறும். பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும். வேறு வழியில்லை” என்று பேசியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in