ஜூனியர் என்.டி.ஆருடன் ரொமான்ஸ்... தாய்லாந்து பறந்த ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்- ஜூனியர் என்.டி.ஆர்.
ஜான்வி கபூர்- ஜூனியர் என்.டி.ஆர்.
Updated on
2 min read

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் டூயட் பாட தாய்லாந்து பறந்திருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், நடிகர் ஜுனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜான்வி மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் டூயட் பாடல் படமாக்கலுக்காக தாய்லாந்து பறந்துள்ளது படக்குழு.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

இதற்கு முன்பு கோவாவில் நடிகர்கள் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சயிஃப் அலிகானுக்கு இடையிலான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து முன்பு ஊடகம் ஒன்றில் ஜான்வி கபூர் பேசியபோது சீக்கிரம் தெலுங்கு கற்றுக்கொள்வேன் எனச் சொல்லி இருந்தார்.

மேலும் அவர் பேசியிருந்ததாவது, “என்னால் தெலுங்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால், பேச முடியவில்லை என்பது வருத்தம்தான். இதை எல்லாம் பொருட்படுத்தாது ‘தேவரா’ டீம் எனக்கு பொறுமையுடன் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்கள்” என்றார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

கொராட்டலா சிவா இயக்கும் இந்தப் படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜான்வி நடிப்பில் சமீபத்தில் ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in