சிவப்பு நிற புடவையில் தங்கமாய் மின்னிய ஐஸ்வர்யா அர்ஜூன்... கலக்கலான திருமண ஆல்பம்!

ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி
ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி

நடிகர்கள் ஐஸ்வர்யா அர்ஜூன் - நடிகர் உமாபதிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சந்தோஷமான தருணங்களை இருவரும் பகிர்ந்திருக்கின்றனர்.

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜூன் கட்டியிருக்கும் ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, துருவா சர்ஜா, ஜெகபதி பாபு, சமுத்திரகனி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டத் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிவப்பு நிற புடவையில் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் தங்கமாய் மின்னும் ஐஸ்வர்யா அர்ஜூன், திருமணத்தின் நிறைவான தருணங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி
ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி

நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராகக் களமிறங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம்தான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. திருமண வாழ்வில் இணைந்துள்ள தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in