பேச்சுலர் பார்ட்டி... அர்ஜூன் மகளின் கலக்கல் ஆல்பம்!

பேச்சுலர் பார்ட்டியில் ஐஸ்வர்யா
பேச்சுலர் பார்ட்டியில் ஐஸ்வர்யா

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இந்த மாதம் நடக்க இருப்பதை ஒட்டி, தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார்.

’ஆக்‌ஷன் கிங்’ நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இந்த மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்த ஆஞ்சநேயர் கோயிலிலேயே திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி.

ஐஸ்வர்யா- உமாபதி
ஐஸ்வர்யா- உமாபதி

நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜூனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மட்டுமல்லாது ஆந்திரா மற்றும் கன்னடாவில் இருக்கும் தனது திரையுலக நண்பர்களையும் மகள் திருமணத்திற்கு அழைத்திருக்கிறார் அர்ஜூன்.

திருமணம் நடக்க இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில், தனது தங்கையுடன் சேர்ந்து பாலியில் நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்து அசத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். அங்கு ஜெட் போட் ரைடு, அட்வென்சர்ஸ் என நேரம் செலவிட்டு மகிழ்ந்திருக்கிறார். நண்பர்களும் ஐஸ்வர்யாவுக்கு கேக் வெட்டி தங்களது ‘பிரைட் டூ பி’ வாழ்த்துகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in