ஹீரோவாகும் வனிதா மகன்... ஹீரோயின் பிரபல இயக்குநரின் மகள்!

வனிதா, விஜய் ஸ்ரீ ஆகாஷ்
வனிதா, விஜய் ஸ்ரீ ஆகாஷ்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஆகாஷ் கதாநாயகனாகிறார். பிரபு சாலமன் இயக்கும் இந்தப் படத்தில் அவரது மகளே கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்து நடிப்பதற்கு அடுத்த வாரிசு ரெடி. வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஆகாஷ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக 'சகுனி’ உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருப்பது நினைவிருக்கலாம்.

விஜய் ஸ்ரீ ஆகாஷ்
விஜய் ஸ்ரீ ஆகாஷ்

நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் தயாரித்து, நடிப்பது என வலம் வந்தவர், இப்போது பெரிய திரையிலும் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். சமீபத்தில் கூட உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்மார்ட்டாக மாறிய ஃபோட்டோஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இவர் அறிமுகமாகும் படத்தை ‘மைனா’, ‘கும்கி’ புகழ் இயக்குநர் பிரபு சாலமன் இயக்குகிறார். தனது கதைக்காக புதுமுகத்தை பிரபு சாலமன் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் விஜய் ஸ்ரீ ஹரி கதைக்குப் பொருத்தமான ஹீரோவாக பொருந்தியுள்ளார்.

ஹசேல் ஷைனி
ஹசேல் ஷைனி

‘மைனா’ அமலாபால், ‘கும்கி’ விக்ரம் பிரபு என பிரபு சாலமன் இயக்கிய படங்கள் நடிகர்களுக்கு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது.

ஹசேல் ஷைனி
ஹசேல் ஷைனி

அதுபோலவே, விஜய் ஸ்ரீ ஹரிக்கும் இவரது படம் நல்ல அறிமுகமாக இருக்கும் என விஜயகுமார் குடும்பத்தினர் நம்புகின்றனர். இந்தப் படத்தில் தனது மகள் ஹசேல் ஷைனியை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார் பிரபு சாலமன் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in