கல்யாண பிஸிக்கு நடுவில் பட அப்டேட்... உமாபதி ராமையாவின் ‘பித்தல மாத்தி’!

'பித்தல மாத்தி’
'பித்தல மாத்தி’
Updated on
2 min read

கல்யாண பிஸிக்கு நடுவில் உமாபதி ராமையா தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இப்போது நடிகர் அர்ஜூன் வீட்டு மருமகன். விரைவில் இவருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. திருமண பிஸி ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது படங்களிலும் பிஸியாக வலம் வருகிறார் உமாபதி. அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பித்தல மாத்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம், தகிடு தத்தம் செய்பவர்களைக் குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. இந்த கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in