அரசியலுக்கு நானும் ரெடி... தாடி பாலாஜி அதிரடி!

தாடி பாலாஜி
தாடி பாலாஜி

அரசியலுக்கு வரவேண்டுமென்று சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் நடிகர் தாடி பாலாஜி இன்று விழுப்புரத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி. இன்று விழுப்புரம் அருகே உள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை வழங்கி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னுடைய சக்திக்குட்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், அரசு பள்ளிகளை ஏளனமாக யாரும் கருதக்கூடாது. அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி புகட்டுவதாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், ”மாணவர்கள் எந்த பள்ளியில் கல்வி பயிலுகிறோம் என்று பார்க்க கூடாது. படித்த பள்ளியிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறோம் எனக் கருத வேண்டும். மாணவர்கள் செல்போனை எவ்வாறு தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்லி தர வேண்டும். செல்போனில் டெக்னாலஜி என்ற பெயரில் வளர்ச்சியும் இருக்கிறது. அதில் தேவையில்லாதது இருப்பதால் கல்வி பாதிக்கபடுவதோடு மனரீதான பாதிப்பிற்கு மாணவர்கள் உள்ளவார்கள்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அரசியலுக்கு வரவேண்டுமென்று சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் முழுமையாக விஜய் அரசியலுக்கு வந்தபிறகு பார்க்கலாம்” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in