'பருத்திவீரன்’ பஞ்சாயத்தில் மெளனம் காத்த நடிகர் சூர்யா... சீக்ரெட் சொன்ன பிரபலம்!

'பருத்திவீரன்’ பஞ்சாயத்தில் மெளனம் காத்த நடிகர் சூர்யா... சீக்ரெட் சொன்ன பிரபலம்!

நடிகர் கார்த்தி தரப்பிற்கும் இயக்குநர் அமீருக்கும் ‘பருத்திவீரன்’ படம் தொடர்பாக பிரச்சினை பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யா மெளனம் காத்தது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. இதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சினிமாவில் நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் அமீர் இயக்கி இருக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். படம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும், இந்தப் படத்தில் இயக்குநர் vs தயாரிப்பாளர் என்ற சர்ச்சை கடந்த 16 வருடங்களாக ஓயாது சென்று கொண்டே இருக்கிறது.

இயக்குநர் அமீர் - ஞானவேல் ராஜா
இயக்குநர் அமீர் - ஞானவேல் ராஜா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘இயக்குநர் அமீர் இந்தப் படம் தொடர்பாக பொய்க்கணக்கு காண்பித்துவிட்டார். அவர் திருடன்’ என்றெல்லாம் ஞானவேல்ராஜா பேசி பரபரப்பு கிளப்பினார். இதனைக் கண்டித்து அமீரும் அறிக்கை விடுத்தார்.

’‘பருத்திவீரன்’ பட விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்தவர்கள் அமைதி காக்கிறார்கள்’ என்று அவர் பதிலுக்குப் பேச அமீருக்குத் திரையுலகில் ஆதரவு பெருகியது. இதனால், வேறு வழியில்லாமல் ஞானவேல்ராஜா மன்னிப்புக் கேட்டார்.

இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா பேசியிருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் மெளனமாகவே இந்தப் பிரச்சினையை கடந்து சென்றார். இதுபற்றி இயக்குநர் பாண்டிராஜ் தனது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். “’பருத்திவீரன்’ பட பிரச்சினை பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் நான் சூர்யா சாருக்கு கால் செய்து ‘ஏன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

அதற்கு அவர், ‘நான், 2டி ராஜசேகர் எல்லோரும் அமர்ந்து என்ன மாதிரியான பதில் கொடுக்கலாம் என்று கலந்து பேசினோம். ஆனால், அந்த சமயத்தில் விஜயகாந்த் சார் உடல்நலன் சரியில்லாமல் இருந்ததால் அறிக்கை வெளியிடுவது முறையாக இருக்காது என்று நினைத்தோம். பரவாயில்லை சார், நானே தாக்கப்பட்டவனாக இருந்து விட்டு போகிறேன்’ என்றார். ஒருவேளை அந்த சமயத்தில் சூர்யா பதில் சொல்லியிருந்தால் அவர்கள் தரப்பு நியாயமும் தெரிய வந்திருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in