மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது... நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி” எனக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று அவர் பொதுவெளியில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதை உறுதி செய்து நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார். ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in