ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’, ‘கூலி’ அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்!

Superstar Rajinikanth
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ மற்றும் ‘கூலி’ படங்களுக்கான அப்டேட் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஒருவார கால பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை, ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாபாஜி குகையிலும் தியானம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அவரிடம் ‘வேட்டையன்’ மற்றும் ‘கூலி’ படங்களின் அப்டேட் குறித்து கேட்டுள்ளனர்.

Rajini in Babaji's cave
பாபாஜி குகையில் ரஜினி

அதற்கு அவர், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்றும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 10ம் தேதி தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இப்படியான ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ’வேட்டையன்’. இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது 171வது படமாக ‘கூலி’ உருவாக இருக்கிறது.

Superstar Rajinikanth
ரஜினிகாந்த்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. விரைவில், ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in