கருணாநிதி இருக்குமிடத்தில் சிவாஜியும் இருப்பார்... நடிகர் பிரபு உருக்கம்!

நடிகர் பிரபு
நடிகர் பிரபு

"கலைஞர் இருக்குமிடத்தில் என் அப்பா சிவாஜியும் இருப்பார். இருவருக்குள்ளும் அப்படி ஒரு நல்லுறவு இருந்தது” என நடிகர் பிரபு உருக்கமாகக் கூறியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் அமைக்கப்பட்ட கலைஞர் புகைப்படக் கண்காட்சிக்கு பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகின்றனர். இன்று நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

“என் அப்பாவுக்குப் பல படங்களில் ஐயா கருணாநிதி வசனம் எழுதி இருக்கிறார். ரெண்டு பேரும் ஒன்றாக சேர்ந்தால் அவ்வளவு ஜாலியாக இருப்பார்கள். ’பராசக்தி’ வெளியான பின்புதான் நானும் பிறந்தேன். ஐயாவுடன் வேலை செய்யும் பாக்கியம் எனக்கு ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் கிடைத்தது.

எனக்கு அதில் பெருமை. என் கன்னத்தை செல்லமாகக் கிள்ளி முத்தம் கொடுப்பார். அப்பா படத்தை டிவியில் பார்த்தாலே அவரை கிள்ளி முத்தம் கொடுப்பார். அந்த அளவுக்கு அவர் மேல் பிரியம் வைத்திருப்பார். இரண்டு பேருக்கும் நல்ல நட்பு இருந்தது.

சிவாஜி- கலைஞர்
சிவாஜி- கலைஞர்

ஐயாவின் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் என் அப்பா கூட இருந்து பார்த்தார். அவருடைய பல நினைவுகளை எனக்கு இந்தக் கண்காட்சி கொடுத்தது. தமிழக மக்கள் மனதில் எப்போதும் கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இருக்கும் இடமெல்லாம் என் அப்பா சிவாஜியும் இருப்பார்” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in