‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’

நடிகர் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ பட டிரெய்லர் வெளியானது!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், பசுபதி, தீபிகா படுகோனே என இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்டப் பலர் இதில் நடிக்கின்றனர்.

 ‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’

பிரபாஸின் கதாபாத்திரப் பெயர் இதில் பைரவா. பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் அறிமுக விழா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்கான் நிகழ்வில்தான் நடந்தது. இதன் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார். “மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்” என்றார்.

இதில் நடிகர் பிரபாஸ் உடன் புஜ்ஜி என்ற காரும் படத்தில் பயணம் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொன்னது போலவே கதை மகாபாரதக் காலத்தில் இருந்து துவங்குகிறது. 'ஆதிபுருஷ்' படத்தில் இருந்தது போல டிரைய்லரில் சில காட்சிகளில் பிரபாஸூக்கு ஆங்காங்ஙே தலை தனியாக தெரியும்படி கிராஃபிக்ஸ் காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தீபிகா, அமிதாப்பின் தோற்றங்கள் மிரட்டுகிறது. டிரைய்லர் இறுதியில் வில்லனாக கமலின் எண்ட்ரி மாஸ் கூட்டுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in