ஆப்பிள் நிறுவனத்தைக் கிண்டல் செய்து எலான் மஸ்க் பகிர்ந்துள்ள பதிவு இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த மீம்ஸில் அவர் ’தப்பாட்டம்’ என்ற தமிழ்ப் படம் ஒன்றின் படத்தைத்தான் பகிர்ந்திருந்தார். இதற்கு நடிகர் துரை சுதாகர் நன்றி கூறியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். அவ்வப்போது வித்தியாசமான கருத்துகளை சொல்கிறேன் பேர்வழி என அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஓப்பன் ஏஐ பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனத்தைக் கிண்டல் செய்து பதிவிட்டது வைரல் ஆனது. அந்த மீமில் அவர் ‘தப்பாட்டம்’ என்ற படத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தார்.
இதற்குதான் அந்தப் படத்தின் நடிகர் துரை சுதாகர் நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ”நான் நடித்த ‘தப்பாட்டம்’ படத்தை எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உலகம் முழுக்கக் கொண்டு சென்றுள்ளார். இதன் மூலம் இந்தத் தமிழ்ப் படம் உலகம் முழுவதும் உள்ள பலரும் பார்த்திருக்கிறார்கள்.
இதற்கு சமூகவலைதளத்திற்கு நான் நன்றி சொல்கிறேன். சிறிய முதலீட்டில் இந்தப் படத்தை எடுத்தோம். ஆனால், மீம் கிரியேட்டர்ஸ் இதை எலான் மஸ்க் வரை கொண்டு சென்றுள்ளார்கள். படம் வெளியாவதற்கு முன்பே இந்த ரீச் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்டில்லை ஆபாசமாக பார்க்காமல், அனைவரும் கலைப்படைப்பாக பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!
வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!