இந்தியா கூட்டணியில் நீடித்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி... ஆம் ஆத்மி கட்சியின் பலே கணக்கு!

ராகுல் கேஜ்ரிவால்
ராகுல் கேஜ்ரிவால்

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை எதிர்கொண்டதில், எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதே வேளையில் தற்போதைய இந்தியா கூட்டணி தொடரும் என்றும், அதற்கு அப்பால் இதர கட்சிகள் எதனுடனும் கூட்டு இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டெல்லி அமைச்சரான கோபால் ராய் இன்று இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம்
அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம்

குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான வெற்றியை குவித்ததன் மூலம் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. அதே உற்சாகத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணை மற்றும் கைது நடவடிக்கைக்கு ஆளானதில் மக்களின் அனுதாபம் கிட்டும் என எதிர்பார்த்த ஆம் ஆத்மிக்கு ஏமாற்றமே கிடைத்தது.

டெல்லியின் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில், இந்தியா கூட்டணியின் கீழ் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து களமிறங்கின. ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 3 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும், 7 தொகுதிகளையும் பாஜகவே கபளீகரம் செய்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ் உடன் கூட்டு சேராது தனித்துப் போட்டியிட்டதில் 3 இடங்கள் மட்டுமே கிட்டின. ஹரியாணா, குஜராத் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் அதுவுமின்றி ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இதனையடுத்தே எதிர்வரும் 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2020 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. டெல்லியின் 70 இடங்களில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது; எஞ்சிய 8 இடங்களில் பாஜக வென்றது.

இந்த சூழலில் வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது, ஆம் ஆத்மி ஆட்சி டெல்லியில் மீண்டும் அமைவதை பாதிக்கும் என்பதோடு, டெல்லியில் பாஜக எழவும் வாய்ப்பு தருவதாக அமைந்து விடும். இந்த கணக்குகளை முன்வைத்தே ஆம் ஆத்மி டெல்லியில் தனித்துப்போட்டி என அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in