வாக்களிக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு... கர்நாடக வாக்குச் சாவடியில் பரபரப்பு!

வாக்களிக்க வந்த பெண்ணுக்கு மாரடைப்பு
வாக்களிக்க வந்த பெண்ணுக்கு மாரடைப்பு

கர்நாடகா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வாக்களிக்க வந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்பெண்ணை சிபிஆர் முறை மூலம் மருத்துவர் ஒருவர் உயிரை காப்பாற்றினார்.

இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி கேரளாவில் 20, கர்நாடகவில் 14, ராஜஸ்தானில் 13, மகராராஷ்டிராவில் 8, உத்தரபிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

இந்நிலையில், கர்நாடகா மாநிம் ஜே.பி.நகர், ஜம்பு சவாரி திண்ணே பகுதி வாக்குச்சாவடியில் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது, வாக்களித்த பெண் ஒருவர், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்ப ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். அதைப் பார்த்துவிட்டு வாக்களிக்க வரிசையில் நின்ற மருத்துவர் பிரகாஷ் உடனடியாக அப்பெண்ணை பரிசோதனை செய்தார்.

மாரடைப்பு ஏற்பட்ட பெண்
மாரடைப்பு ஏற்பட்ட பெண்

இதயத் துடிப்பு சீராக இல்லாமல் இருந்ததை அறிந்த அவர் உடனடியாக, அப்பெண்ணுக்கு சிபிஆர் முறை மூலம் முதலுதவி அளித்து காப்பாற்றினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அப்பெண் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய பெண்ணை சமயோஜிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மருத்துவரை பொதுமக்கள் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in