கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு: கொலையில் முடிந்த விபரீதம்

கொலை
கொலை
Updated on
2 min read

நாகப்பட்டினம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த மோகன்ராம் மற்றும் விக்கி ( 20 ), இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ் ( 21 ), டேவிட் (18 ) ஆகியோருக்கு இடையே திருவிழாவின்போது டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டது. திருவிழா முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் வெளிநாட்டில் இருந்த வந்த தனது நண்பர் உதயகுமார் வீட்டில், மோகன்ராம் திருவிழாவில் நடந்த சண்டை தொடர்பான வீடியோவை காட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

கோயில்
கோயில்

இதனை அறிந்த மோகன்ராம் மீது கோபமடைந்த விக்கி ( 20 ), இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ் ( 21 ), டேவிட் (18 ) உள்ளிட்ட 5 பேர் உதயகுமார் வீட்டு வாசலில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறவே, உதயகுமாரின் தந்தை பக்கிரிசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பக்கிரிசாமியை தள்ளிவிட்டதில் கீழே விழுந்து பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை வழக்கில் கைதானவர்கள்
கொலை வழக்கில் கைதானவர்கள்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீஸார் பக்கிரிசாமி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிருதிவிராஜ், விக்கி இருவரை பிடித்து விசாரணை செய்துவரும் போலீசார் தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர். நாகையில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in