அதிர்ச்சி... மின்கம்ப வயர் அறுந்து விழுந்து 12ம் வகுப்பு மாணவி பலி!

மாணவி ஏஞ்சல்
மாணவி ஏஞ்சல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின்சார கம்பத்திலிருந்த வயர் அறுந்து 16 வயது பள்ளி மாணவி மீது விழுந்ததில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே N. சண்முகசுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கருத்தபாண்டி. இவரது மகள் ஏஞ்சல்(16), ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருவிக அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு செல்ல உள்ளார். இந்நிலையில் மாணவி ஏஞ்சல், இன்று காலை சண்முகசுந்தராபுரத்தில் உள்ள தண்ணீர் குழாயில் துணி துவைத்து கொண்டிருந்த போது அவரது தலைக்கு மேல் சென்ற மின்சார கம்பத்தின் வயர் அறுந்து மாணவி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அறுந்து விழுந்த மின்சார வயர்
அறுந்து விழுந்த மின்சார வயர்

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவி பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது இறப்பை உறுதி செய்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர். N.சண்முகசுந்தராபுரம் பகுதியில் இருக்கும் கொடிக்கம்பங்களில் மின்சார வயர் தாழ்வாக செல்வதாகவும், அறுந்துவிழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும் அதை சரி செய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

பள்ளி இன்று திறந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவி ஏஞ்சல் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in