வறட்சியால் தத்தளித்த கர்நாடகாவுக்கு நல்ல செய்தி... 10 நாட்களில் 80 சதவீதம் கூடுதல் மழை!

கர்நாடகாவில் மழை
கர்நாடகாவில் மழை

கடந்த ஆண்டு கோடை வெயில் மற்றும் வறட்சியால் தத்தளித்த கர்நாடகாவுக்கு இந்த ஆண்டு பருவமழை நல்ல செய்தியைத் தந்துள்ளது. பருவமழை தொடங்கிய பத்து நாட்களில் வழக்கத்தை விட 80 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

கடந்த ஆண்டு கோடை வெயில் மற்றும் வறட்சியால் கர்நாடகா தத்தளித்தது. அதன்படி 2023-ம் ஆண்டில், ஜூன் 1 முதல் 14-ம் தேதி வரை 66 சதவீத மழை பற்றாக்குறையாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. முதல் பத்து நாட்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கிய பத்து நாட்களில் வழக்கத்தை விட 80 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

கர்நாடகாவில் மழை
கர்நாடகாவில் மழை

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் 85.6 மி.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாக 47.6 மி.மீ மழை பெய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தட்சிண கன்னடா, சிக்கமகளூரு மற்றும் குடகு தவிர அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்

தட்சிண கன்னடா, சிக்கமகளூரு மற்றும் குடகு ஆகிய மாவட்டங்கள் மட்டும் முறையே 26 , 3 மற்றும் 30 சதவீதம் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, கடலோர கர்நாடகத்தில் 25 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சராசரியாக 155.6 மி.மீ மழை பெய்யும் நிலையில், 192.4 மி.மீ மழை பெய்துள்ளது.

கர்நாடகாவின் வட உள்நாட்டில் 140 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இப்பகுதியில் வழக்கமாக பெய்ய வேண்டிய 33 மில்லி மீட்டர் மழைக்கு பதிலாக 79.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தெற்கு உள்நாட்டில் 82 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக பெய்ய வேண்டிய 38.5 மி.மீ.க்குப் பதிலாக, இங்கு 70.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

மழை
மழை

இதில் விஜயப்பூரில் அதிகபட்சமாக 329 சதவீத மழை பெய்துள்ளது. பெங்களூரு கிராமப்புறங்களில் 272 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. ராம்நகர் மற்றும் விஜயநகரில் 222 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. உடுப்பியில் 5 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் மழை
கர்நாடகாவில் மழை

பெங்களூரு நகர பகுதியில் 145 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல்10-ம் தேதி வரை வழக்கமாக பெய்ய வேண்டிய 37 மி.மீ மழைக்கு எதிராக 90.6 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 66 சதவீதம் மழை குறைவாக இருந்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை நன்றாக பெய்துள்ளது. ஆனால், மூன்று நாட்களுக்கு பின், மழை குறைய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in