ரெமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாள்களாக ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம், கனமழைக்கு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரெமல் புயல் தாக்கம் காரணமாக மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்கள், அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இடைவிடாத கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இம்மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ளன. வடகிழக்கு எல்லை ரயில்வே (என்எப்ஆர்) தெற்கு அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் கடந்த 4 நாள்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அசாம், மேகாலயா மற்றும் மிசோரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் (என்எச் 6) ஒரு பகுதி நிலச்சரிவால் நேற்று துண்டிக்கப்பட்டது.
அசாம், மேகாலயா வழியாக பாயும் கோபிலி ஆறு அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதால் அசாமில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 9 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் இம்பாலில் வெள்ளம் புகுந்ததால் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரமில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பலரை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ரெமல் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, சுவர் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது என பல்வேறு நிகழ்வுகளில் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ
சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!
வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!