நேருக்கு நேர் கார்கள் மோதி பயங்கர விபத்து... பிரபல யூடியூபர்கள் 4 பேர் உயிரிழப்பு!

உயிரிழந்த யூடியூபர்கள்
உயிரிழந்த யூடியூபர்கள்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பிரபல யூடியூபர்களான லக்கி, சல்மான், ஷாருக் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இளைஞர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த எஸ்யூவி கார் மீது அவர்கள் வந்த கார் மோதியது.

விபத்தில் உயிரிழந்த யூடியூபர்கள்
விபத்தில் உயிரிழந்த யூடியூபர்கள்

இதில் இரண்டு கார்களில் இருந்தவர்களும் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தவுடன், மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய லக்கி, சல்மான், ஷாருக் மற்றும் ஷாநவாஸ் ஆகியோரை கஜ்ரௌலா மருதுதுவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் யூடியூபர் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த யூடியூபர்கள், ரவுண்ட் 3 வேர்ல்ட் என்ற சேனலுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களின் நண்பர்களின் பிறந்த நாளுக்குச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in