கழிவறைக்குள் புகுந்த 3 அடி நீள நாகப்பாம்பு... லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர்!

கழிவறைக்குள் புகுந்த பாம்பு பத்திரமாக மீட்பு
கழிவறைக்குள் புகுந்த பாம்பு பத்திரமாக மீட்பு

மயிலாடுதுறை அருகே வீட்டின் கழிவறைக்குள் புகுந்த 3 அடி நீள கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் குமரக்கோயில் மேலவீதி பகுதியில் வசித்து வரும் சந்தோஷ என்பவர் இன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது உள்ளே இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதால், சந்தேகம் அடைந்த அவர் உள்ளே எட்டி பார்த்துள்ளார்.

கழிவறைக்குள் புகுந்த பாம்பு பத்திரமாக மீட்பு
கழிவறைக்குள் புகுந்த பாம்பு பத்திரமாக மீட்பு

அப்போது சுமார் 3 அடி நீள பாம்பு ஒன்று நெளிந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கதவை சாத்திவிட்டு இது தொடர்பாக பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் நீண்ட நேரம் கழிவறையின் அருகே தேடுதலில் ஈடுபட்டார். அப்போது கழிவறையில் அமைக்கப்பட்டிருந்த கதவின் இடுக்கிற்குள் பாம்பு நுழைந்து பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறிது நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பை உள்ளே இருந்து வெளியே எடுத்தார்.

பிடிபட்ட பாம்பை டப்பாவில் அடைக்கும் பாம்புபிடி வீரர் பாண்டியன்
பிடிபட்ட பாம்பை டப்பாவில் அடைக்கும் பாம்புபிடி வீரர் பாண்டியன்

அப்போது அந்த பாம்பு சுமார் மூன்று அடி நீளமும், கொடிய விஷமும் கொண்ட நாகப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை ஒரு டப்பாவில் அடைத்த பாண்டியன், பின்னர் வனப்பகுதியில் விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றார்.

கழிவறைக்குள் புகுந்த தவளையை தேடியபடி வந்த பாம்பு, தவறுதலாக கழிவறைக்குள் பதுங்கி இருக்கலாம் என பாம்புபிடி வீரர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக சந்தோஷ் மற்றும் அவரது வீட்டின் அருகே இருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in