25 ஆடுகளை வெட்டி மாந்தீரிக பூஜை... கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு!

ஆடுகள் பலியிடப்பட்ட பண்ணை.
ஆடுகள் பலியிடப்பட்ட பண்ணை.

நிலத்தகராறு தொடர்பாக 25 செம்மறி ஆடுகளை வெட்டி அதன் தலைகள் அருகே ஒருவரின் புகைப்படத்தை வைத்து மாந்தீரிகம் நடத்தப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு எதிராகவும், முதலமைச்சர் சித்தராமையாவிற்கு எதிராகவும் மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகம் கேரளாவில் நடந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகா துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அப்படியான சம்பவம் கேரளாவில் நடக்கவில்லை என்று அம்மாநில அமைச்சர் ஆர்.பிந்து மறுப்பு தெரிவித்தார்.

டி.கே.சிவகுமார், ஆர்.பிந்து
டி.கே.சிவகுமார், ஆர்.பிந்து

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன் கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 25 ஆடுகளை வெட்டி மாந்தீரிகம் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி அருகே உள்ள பண்ணையில் தான், இந்த மாந்தீரிக வேலை நடந்துள்ளது. அங்குள்ள பண்ணையின் முன் பகுதியில் 25 செம்மறி ஆடுகளை வெட்டி அவற்றின் தலைகள் மற்றும் சிலரின் புகைப்படங்களை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளது.

அந்த இடத்தின் உரிமையாளர்களான கோபு குமார் மற்றும் காமேஷ் ஆகியோருக்குத் தான் இந்த மாந்தீரிகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பிரபு என்பவர் தான் மாந்தீரிகத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

பூஜை நடந்த இடத்தில் 25 ஆட்டின் தலைகள், ஒரு முட்டை, உருவப்படம், ஒரு மலர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜேஷ் பிரபுவிற்கும், கோபு குமாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ராஜேஷ் பிரபுவிற்கு எதிராக கோபு குமார் நீதிமன்றத்தை நாடியுள்ளர். இதனால் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது இந்த மாந்தீரிக பூஜை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாந்தீரிகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in