நின்றுக் கொண்டிருந்த பைக் மீது அதிவேகத்தில் மோதிய கார்: 2 பேர் பரிதாபமாக பலி

பைக் மீது கார் மோதும் காட்சி
பைக் மீது கார் மோதும் காட்சி

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் வெங்கடேசன் மற்றும் பொன்மாடசாமி. இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஊரிலிருந்து எட்டையபுரத்திற்கு சென்றுள்ளனர். முத்தலாபுரம் பாலம் அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள கடையில் குடிக்க வாட்டர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார், நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பின்புறத்தில் இருந்து மோதிய கார்
பின்புறத்தில் இருந்து மோதிய கார்

இதில் சம்பவ இடத்தில் குமார் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த குமார் வெங்கடேசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பொன் மாடசாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த பொன் மாடசாமி
விபத்தில் உயிரிழந்த பொன் மாடசாமி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in