பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்...10,000 பேர் பங்கேற்பு!

ஹாசனில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்
ஹாசனில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்
Updated on
3 min read

பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் கைது செய்ய வலியுறுத்தி கர்நாடக மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் 13 அமைப்புகளைச் சேர்ந்த 10,000 பேர் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட நான்கு பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

பிரஜ்வல், எச்.டி.ரேவண்ணா
பிரஜ்வல், எச்.டி.ரேவண்ணா

இதனிடையே ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடினார். சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்ஐடி) போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும், ஒரு முறை ப்ளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா இரு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

அதில், ‘‘மே 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஹாசனில் இன்று(மே 30) மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி பேசுகையில், "பாலியல் ஒடுக்குமுறையைக் கண்டிக்கவும், துன்பப்படும் பெண்களுக்கு தைரியம் கொடுக்கவும் நாம் அனைவரும் இன்று இங்கு இருக்கிறோம். பணம் மற்றும் அதிகாரத்தின் கொடுங்கோன்மை இனி நடக்காது. இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டால், மத்திய அரசை வேரோடு பிடுங்கி எறிவோம்" என்று கூறினார்.

 சுபாஷினி அலி
சுபாஷினி அலி

மேலும் அவர் கூறுகையில், “சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகளான போதிலும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறையும் தொடர்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா, ரேவண்ணா உள்ளிட்ட இந்த செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அத்துடன் இவர்களை எக்காரணம் கொண்டும் அரசு பாதுகாக்க முயலக்கூடாது” என்றார்.

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 113 அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் 'ஹசனா சலோ' என்ற இந்த கண்டனப் பேரணியில் பங்கேற்றனர். ஹாசன் ஹேமாவதி சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள புதிய பேருந்து நிலைய சாலையில் ஊர்வலம் நிறைவுற்ற. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஹாசனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ஹாசனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இதில் ஜனவாதி மகிளா சங்கத் தலைவர் மீனாட்சி பாலி, எழுத்தாளர்கள் பானு முஷ்டாக், ரூப் ஹாசன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான இந்த பேரணியில் பெங்களூரு, மைசூர், ஹாசன், மங்களூரு, மாண்டியா மற்றும் சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in