ரயிலில் முன் பதிவு இருக்கையில் அமர்ந்து அழிச்சாட்டியம் செய்யும் பெண் பயணி... வைரலாகும் வீடியோ!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த பெண்
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த பெண்

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு எழுந்து கொள்ள முடியாது எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது இருக்கைகளை முன் பதிவு செய்து பயணிக்கின்றனர். ஆனால், சில வட மாநிலங்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொள்ளும் சிலர், உரிய பயணச்சீட்டுடன் வரும் பயணிகளுக்கு இடத்தை வழங்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் போலீஸார் அறிவுறுத்தினாலும் இது போன்ற நபர்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வருகின்றனர்.

இப்படித்தான், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, எழுந்து கொள்ளுமாறு பயணி ஒருவர் கூறியதற்கு, அந்தப் பெண் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷோன்கபூர் என்பவர் எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர் ரயில் பெட்டியில் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் செல்லும் வாலிபர் ஒருவர், ”இது நான் முன்பதிவு செய்த இருக்கை. எழுந்து கொள்ளுங்கள்.” என்கிறார்.

ரயில்
ரயில்

ஆனால் அதற்கு பதில் அளித்த அந்த பெண், ”நான் கேட்பதாக இல்லை. நான் இங்கு தான் அமர்ந்திருப்பேன். தேவை என்றால் நீங்கள் நின்று கொண்டே வாருங்கள். அல்லது பேசிக் கொண்டே இருங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக் கொள்ளுங்கள்.” என்று மிகுந்த ஆணவத்தோடு பதில் சொல்கிறார்.

தொடர்ந்து அவரிடம் அந்த நபர் தான் முன்பதிவு செய்து இருப்பதாக கூறிய போது, ”இது என் இருக்கை அல்ல. ஆனாலும் எழுந்திரிக்க முடியாது. தேவை என்றால் டிக்கெட் பரிசோதகரை வரச் சொல்லுங்கள்; நான் பேசிக் கொள்கிறேன்” என்கிறார்.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு தங்களது அனுபவ கருத்துக்களை பின்னூட்டமாக பதிவிட்டு வருகின்றனர். அதில், ’இவர் தென் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். அங்கு பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி வழங்கப்பட்டுள்ளது. அதை தவறாக புரிந்து கொண்டு ரயிலிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.’ எனவும் விமர்சிக்கின்றனர்.

சிலர், ’பெண்கள் என்றால் எந்த முறைகேட்டிலும் ஈடுபடலாம் என, இவர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்’ என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ எப்போது, எந்த ரயிலில், எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in