ககன்யானுக்கு முன்னதாக பெண் ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ... மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!

வாயுமித்ரா திட்டம்
வாயுமித்ரா திட்டம்

மனிதர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான 'ககன்யான்' திட்டத்துக்கு முன்னதாக பெண் ரோபோ விண்வெளி வீராங்கனையான 'வாயுமித்ரா' விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"ஆளில்லா வாயுமித்ரா திட்டம் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், மனிதர்களை ஏற்றிச் செல்லும் ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது அதாவது 2025ல்.

வாயுமித்ரா என்பது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளான 'வயோமா' (விண்வெளி என பொருள்) மற்றும் 'மித்ரா' (நண்பர்) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பெயர். பெண் ரோபோ விண்வெளி வீராங்கனை தொகுதி அளவுருக்களைக் கண்காணிக்கும் திறன், எச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் வாழ்க்கை ஆதரவு இயக்கத்தை செயல்படுத்தும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ரேபோவால், 6 பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானமான 'ககன்யான்' திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, முதல் சோதனை வாகன விமானம் 'டிவி டி1’ கடந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று செயல்படுத்தப்பட்டது. இது விண்வெளியிலிருந்து வெளியேறுவது மற்றும் பாராசூட் அமைப்பு ஆகியவற்றை பரிசோதித்தது.

திட்டத்தின் ஏவுகணை குறித்த மதிப்பீடு பணி முடிவடைந்துள்ளது. அனைத்து உந்துவிசை நிலைகளும் தகுதி பெற்றவையாக உள்ளன. அனைத்துப் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆளில்லா ரோபோ விண்கலம் 'வாயுமித்ரா' இந்த ஆண்டு அனுப்பப்பட உள்ளது. 'ககன்யான்' திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்"

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in