டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மக்களை அதிக செலவு செய்ய வழிவகுக்கிறது: நிபுணர்கள் தகவல்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் வேளையில், அது மக்களை அவசியமற்ற செலவுகளை செய்ய தூண்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (யுபிஐ) அதிகரிப்பு காரணமாக ரொக்கப் பயன்பாடு குறைந்து வருகிறது. மக்கள் தங்களது அன்றாட தேவைகளை யுபிஐ செலுத்துதல்கள் மூலம் வாங்குகின்றனர். , அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், உயர்தர கேஜெட்டுகள் மற்றும் டிசைனர் ஆடைகள் போன்றவற்றையும் யுபிஐ செலுத்துதல்கள் மூலம் வாங்குகின்றனர்.

யுபிஐ பணப் பரிவர்த்தனை
யுபிஐ பணப் பரிவர்த்தனை

யுபிஐ பணம் செலுத்துதல்கள் சில நேரம் மக்களை தேவையற்ற பொருள்களையும் வாங்க தூண்டுவதோடு, அவர்களை அதிக செலவு செய்ய வைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாங்கும் பொருள்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழியாக யுபிஐ / கியூஆர் கோட் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைக்கு சில விநாடிகளே தேவைப்படுவதால் பரிவர்த்தனைகள் எளிதாகிறது.

ஐஐஐடி டெல்லியின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நாட்டில் கிட்டத்தட்ட 74 சதவீத மக்கள் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிக செலவு செய்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சந்தை நுண்ணறிவு நிறுவனமான சிஎம்ஆர்-ன் தொழில் நுண்ணறிவு குழு தலைவர் பிரபு ராம் கூறுகையில், “டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை எளிதாகவும், தடையின்றியும் இருக்கிறது.

கியூ ஆர் கோட் பேமெண்ட்
கியூ ஆர் கோட் பேமெண்ட்

எனினும், ரொக்கப் பணத்துடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையானது பணம் ஒருவரின் சுவாதீனத்திலிருந்து வெளியே செல்கிறது என்ற உணர்வை குறைக்கிறது" என்றார்.

இந்திய தேசிய செலுத்துதல்கள் கழகத்தின் (என்பிசிஐ) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1,330 கோடியை எட்டியுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்து 11,768 கோடியை எட்டியது. நிபுணர்கள் கூற்றுப்படி, இந்தியாவில் நுகர்வோர் செலவினம் அதிகரித்து வருகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை
டிஜிட்டல் பரிவர்த்தனை

மக்கள் கார்கள், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற பொருட்களில் செலவழிக்கின்றனர். ஒரு புறம் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தேவையற்ற செலவுகளை மேற்கொள்ள தூண்டுவதாக கூறினாலும், மற்றொருபுறம் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in