நண்பரை உயிரோடு தீவைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி...பாரில் நடந்த பயங்கரம்!

கைது செய்யப்பட்ட வெங்கடசாமி, முனிராஜு
கைது செய்யப்பட்ட வெங்கடசாமி, முனிராஜு

பாரில் குடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுவை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் நகரில் உள்ள சஞ்சய் பாருக்கு கடந்த 22-ம் தேதி நாகேஷ் , வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் மது அருந்தச் சென்றனர். அவர்கள் மூவரும் ஒரே டேபிளில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதை ஏறி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மது
மது

அப்போது திடீரென நாகேஷ் மீது திடீரென மதுவை ஊற்றி வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் தீயை வைத்தனர். இதனால் நாகேஷ் உடலில் தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த பார் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர்கள், நாகேஷ் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

இதைக் கண்ட வெங்கடசாமி, முனிராஜு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து பார் ஊழியர்கள், நாகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்ததுடன், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த தகவல் அறிந்த ஆனேக்கல் போலீஸார், பாருக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நண்பரையே அவரது கூட்டாளிகள் மதுவை ஊற்றி உயிரோடு கொளுத்த முயன்ற சம்பவம் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், நாகேஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.

போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் தீ வைத்து எரித்ததாக அவர் கூறினார். இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கிடசாமி, முனிராஜு ஆகியோரை போலீஸார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கிடசாமி, முனிராஜு ஆகியோரை ஆனேக்கல் போலீஸார் இன்று கைது செய்தனர். எதற்காக நாகேஷை தீவைத்து எரித்தார்கள் என்று போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in