அக்னி-5 ஏவுகணையின் ராணி... சாதனைக்கு மூளையாக இருந்த பெண் விஞ்ஞானி!

ஷீனா ராணி
ஷீனா ராணி
Updated on
2 min read

கடந்த 11ம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனையின் இயக்குநராக இருந்தவர் கேரளாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஷீனா ராணி. அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) அக்னி-5 ஏவுகணைச் சோதனை கடந்த 11ம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5, ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்து தாக்கும் திறன்கொண்டது.

அக்னி-5 ஏவுகணை
அக்னி-5 ஏவுகணை

இதை, ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி தொழில்நுட்பம் என்று கூறுகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏவுகணை சோதனையை நடத்திய டிஆர்டிஓ குழுவை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில் வெகுவாக பாராட்டினார். அதில் ’மிஷன் திவ்யாஸ்திரத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5ஐ வெற்றிகரமாக சோதனை செய்ததில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள்பெருமிதம் கொள்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷீனா ராணி
ஷீனா ராணி

’மிஷன் திவ்யாஸ்திரா’ திட்டத்தின் கீழ் நடந்த இந்த ஏவுகணைச் சோதனையின் இயக்குநராக இருந்தவர் கேரளாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஷீனா ராணி. 57 வயதான இவர் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் வென்றவர். கணினி அறிவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.

முதலில் இவர் ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ-விலும், தொடர்ந்து 8 ஆண்டுகள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும் பணியாற்றியுள்ளார். 1998 பொக்ரான் சோதனைக்குப் பின் 1999ம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைத் தொடரின் ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பில் பணியாற்றி வருகிறார். ஷீனா ராணியின் கணவரும் டிஆர்டிஓவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ல் இஸ்ரோவில் ஏவப்பட்ட கெளடில்யா செயற்கைக்கோளுக்கும் அப்போது ராணியே பொருப்பேற்றிந்தார். இவர் தற்போது மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் முதல் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக செய்துகாட்டியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?

திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in