இதெல்லாம் பத்தாது... மன்னிப்பு விளம்பரத்தை பெரிய அளவில் கொடுங்கள்... பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கெடுபிடி!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

"மன்னிப்பு விளம்பரத்தை வெட்டி எடுத்து எங்கள் கைகளில் கொடுக்கும் அளவுக்கு பெரிதாகக் கொடுங்கள். அவற்றைப் மைக்ரோஸ்கோப் வைத்து பார்க்கும்படி சிறியதாகக் கொடுக்காதீர்கள்" என்று பாபா ராம்தேவ்-க்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதையும் மீறி தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்திய பதஞ்சலி நிறுவனத்தை, உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததால், ராம்தேவ் மன்னிப்புக் கோரினார். கடந்த 16ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜரான ராம்தேவ்,"உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன்" என்று உறுதியும் அளித்தார். இந்நிலையில், ஆங்கில மருத்துவம் பற்றி அவதூறாக விளம்பரம் வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு, நேற்று தேசிய செய்தி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பொது மன்னிப்பு கோரினார் ராம்தேவ். "நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் பாபா ராம்தேவ்
பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் பாபா ராம்தேவ்

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுதுல்லா ஆகியோர் முன்னிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறினார். அதற்கு நீதிபதிகள்,"மன்னிப்பு முன்பே கேட்டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை" என்றனர்.

அதற்கு ரோஹத்கி, “ரூ.10 லட்சம் செலவில் மன்னிப்பு கோரி 67 செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளனர்” என்றார். அதற்கு நீதிபதிகள், “மன்னிப்பு முதன்மைப்படுத்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளதா? பதஞ்சலி விளம்பரங்களைப் போல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரோஹத்கி “மனுதாரர்கள் நிறைய செலவழித்துள்ளனர்” என்றார். அதற்கு நீதிமன்றம் “அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றனர்.

மன்னிப்பு விளம்பரம்
மன்னிப்பு விளம்பரம்

"இந்திய மருத்துவ சங்கத்திடம் ரூ.1000 கோடி அபராதம் கேட்டு ஒரு மனு தாக்கலாகியுள்ளது. இது பதஞ்சலி சார்பில் யாரோ ஒருவர் தாக்கல் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்" என்று நீதிபதிகள் கூற, ரோஹத்கி, "அதற்கும் தன் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

இதனையடுத்து வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அப்போது நீதிபதி கோலி, "இனி நீங்கள் அளிக்கும் விளம்பரத்தை வெட்டி எடுத்து எங்கள் கைகளில் கொடுக்கும் அளவுக்கு பெரிதாகக் கொடுங்கள். அவற்றைப் மைக்ரோஸ்கோப் வைத்து பார்க்கும்படி சிறியதாகக் கொடுக்காதீர்கள்... எங்களுக்கு அசல் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும். இதுதான் எங்களின் வழிகாட்டுதல்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in