மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சமூக வலைதளங்கள், ஆன்லைனில் மத்திய அரசு குறித்த செய்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உண்மைச் சரிபார்ப்பு குழுவை அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொய் செய்திகளை கண்டறியும் உண்மை சரிபார்ப்பு குழு
பொய் செய்திகளை கண்டறியும் உண்மை சரிபார்ப்பு குழு

மத்திய அரசுக்கு எதிரான ஆன்லைன் செய்திகளின் உண்மைச் சரிபார்ப்பை அனுமதிக்கும் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள்-2023க்கு எதிரான மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பத்திரிகை தகவல் பணியகத்தின் (பிஐபி) கீழ் உண்மைச் சரிபார்ப்பு பிரிவை (ஃபேக்ட் செக்கிங் யூனிட்) அமைக்க மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

கருத்து, பேச்சு சுதந்திரம்
கருத்து, பேச்சு சுதந்திரம்

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடிகர் குணால் கம்ரா, மற்றும் 'எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா' ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள், அரசியலமைப்பு ரீதியாக தீவிரமான பிரச்சினைகள். இது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான விஷயமாகும். எனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கப்படும்" என உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!

பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in