சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயக படுகொலை... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயக படுகொலை என்றும், இதனை அனுமதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கும் போட்டியிட்டன.

இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகளைப் பெற்றார். குல்தீப் சிங்கிற்கு பதிவான 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் குல்தீப் தலோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சிதைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார். ஜனநாயகம் இப்படியே கொலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது. இது ஜனநாயகத்தை கேலி செய்யும் செயல். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து வாக்குச் சீட்டுகள், வீடியோ பதிவுகளை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பிப்ரவரி 7ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in