'வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்' - ஈரான் அதிபர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் இந்திய பிரதமர் மோடி
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் இந்திய பிரதமர் மோடி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகள் இணைந்து கட்டிய அணை திறப்பு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணம் வழியாக அதிபர் ரைசி ஹெலிகாப்டரில் நாடு திரும்பினார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகே வனப் பகுதியில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் கடினமான தரையிறக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

இந்நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்தி மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் சையது இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ரைசியின் திடீர் மறைவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in