‘ராம நவமி கொண்டாட்டங்களுக்கு நேரில் வரவேண்டாம்; டிவியில் லைவ் பாருங்க...’ பக்தர்களுக்கு அறிவுறுத்திய அறக்கட்டளை

இரவு அலங்காரத்தில் ஜொலிக்கும் ராமர் கோயில்
இரவு அலங்காரத்தில் ஜொலிக்கும் ராமர் கோயில்

’ராம நவமி கொண்டாட்டங்களுக்கு அயோத்தி ராமர் கோயில் தரிசனத்துக்கு நேரில் வரவேண்டாம் என்றும், கோயில் சிறப்பு நிகழ்வுகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் காணலாம்’ என்றும் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர்.

அயோத்தியில் எழுந்துள்ள பாலராமர் கோயில் அதன் முதல் ராம நவமி கொண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இதனையொட்டி ராம நவமி தினமான ஏப்.17 அன்று விமரிசையான ஏற்பாடுகள் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆன்மிக நிகழ்வுகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை பலதும் அடங்கும்.

அயோத்தி பால ராமர்
அயோத்தி பால ராமர்

அயோத்தி ராமர் கோயிலின் முதல் ராம நவமி என்பதால், அதையொட்டிய கொண்டாட்டங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அயோத்தியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மற்றும் அதையொட்டிய தடுமாற்றங்களைத் தவிர்க்க இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் நடக்கும் சடங்குகளை நேரடியாக ஒளிபரப்ப நகரின் 100 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்படும் என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் ராமர் கோயில் வளாகத்தில் குவியும் போக்கை தவிர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

”ராம நவமி அன்று ஒருநாளில் மட்டும் ராமர் கோயில் தொடர்ந்து 20 மணி நேரத்துக்கு திறந்திருக்கும். வருகை தரும் ஒவ்வொரு பக்தரும் பால ராமரை தரிசனம் செய்ய இது உதவும். பக்தர்களின் வருகையை சீரமைக்க ஏழு வரிசைகள் அமைக்கப்படும்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

அயோத்தி நகரம்
அயோத்தி நகரம்

அயோத்தி தாமில் ராம நவமி மேளா ஏப்ரல் 9 அன்று தொடங்கி ராம நவமி வரை தொடரும். மேளா மைதானங்கள் ஏழு மண்டலங்களாகவும், 39 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் போக்குவரத்து மேலாண்மை 2 மண்டலங்கள் மற்றும் 11 தொகுப்புகளாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி தாம் முழுவதும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 24 கேமராக்கள் மூலம் வாகனங்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த சிசிடிவி கேமராக்கள் கூட்டத்தின் அளவை மதிப்பிடுவதோடு, பல்வேறு இடங்களில் தேவையான போக்குவரத்து மாற்றங்களையும் தீர்மானிக்க உதவும்.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in