ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு

பஜன்லால் சர்மா
பஜன்லால் சர்மா

ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வர் பஜன் லால் சர்மா வெளியிட்டுள்ள பதிவில், “உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, சுகாதாரப் பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு கொரோனா பரிசோதனை முடிவு நேர்மறையாக வந்துள்ளது.
நான் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுகிறேன். மேலும் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் காணொலி முறையில் கலந்து கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

இந்த தகவலை அறிந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "முதல்வர் பஜன் லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அசோக் கெலாட்டும் கடந்த மாதம், கொரோனா தொற்று மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 217 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 28 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,50,30,684 ஆக உள்ளது. இதில் 1,081 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,26,846 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 75-லிருந்து 38 ஆக குறைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in