ரயில் பயணிகள் கவனத்திற்கு... அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடு நீக்கம்

UTS செயலி
UTS செயலி

ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் எளிதாக்கும் ஒரு நடவடிக்கையாக, செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்குவதில், முக்கிய கட்டுப்பாட்டை இந்திய ரயில்வே நீக்கியுள்ளது.

ரயில்வே பயணிகள் இப்போது வீட்டை விட்டு வெளியே வராது முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை UTS செயலி வழி எளிதாகப் பெறலாம். இதனை ரயில்வே மூத்த கோட்ட வணிக மேலாளர் சவுரப் கட்டாரியா இன்று வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

ரயில் பயணிகள்
ரயில் பயணிகள்

இதற்கு முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்ய 50 கிமீ சுற்றளவுக்கு எல்லை கட்டுப்பாடு இருந்தது. அந்த வரம்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் ஸ்மார்ட் போன் மற்றும் இணைய இணைப்பு மூலம் எங்கிருந்தும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இனி முன்பதிவு செய்யலாம்.

குறிப்பாக உள்ளூர் ரயில்கள் மூலம் லட்சக்கணக்கானோர் பயணம் செய்யும் மும்பை போன்ற மாநகரங்களின் ரயில் பயணிகளுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும்.

முன்னதாக, பயணிகள் 20 கிமீ சுற்றளவில் உள்ள புறநகர் ரயில்களுக்கும், புறநகர் அல்லாத ரயில்களுக்கு 50 கிமீ சுற்றளவிற்கும் காகிதமில்லா டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும். ஆனால் தற்போதைய புதிய மாற்றங்கள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை மேலும் ஊக்குவிக்கும், ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசைகளைக் குறைக்கும்.

UTS செயலி
UTS செயலி

இருப்பினும், உள் வரம்புகள் குறித்த சட்டங்கள் மாறாமல் உள்ளன. இது ரயில் நிலையத்துக்கு அருகில் டிக்கெட் வாங்க அனுமதிக்கிறது. தற்போது சுமார் 25 சதவீத பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை வாங்க செயலி வழி பயன்பாட்டைப் உபயோகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை இனி மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

பகீர்... நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்: தமிழக மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்... கங்கை அமரன் பதிலடி!

'விடுதலை2’ நடிகர்களுக்கு சம்பள பாக்கி; ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வாக்குவாதம்!

பகீர்... 'தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை': வீட்டுச் சுவற்றில் எழுதிய கர்நாடகா போலீஸ்காரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in