'விடுதலை2’ நடிகர்களுக்கு சம்பள பாக்கி; ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வாக்குவாதம்!

’விடுதலை’ படம்
’விடுதலை’ படம்
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘விடுதலை 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, மதுரையில் இருந்து வந்த துணை நடிகர்களுக்கு பேசிய சம்பளம் கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கிறார்கள்.

இதனால், தென்காசி ரயில்வே நிலையம் அருகே நேற்று நள்ளிரவில் இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது ‘விடுதலை2’. இதன் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடந்து வருகிறது. முதல் பாகத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரமான விஜய்சேதுபதியின் பிளாஷ்பேக் இரண்டாம் பாகத்தில் முழுவதும் காட்டப்பட இருக்கிறது.

விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர்
விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர்

இதற்காக, விஜய்சேதுபதி- மஞ்சுவாரியர் போர்ஷன் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் திரைக்கதையில் அதிக மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் வெற்றிமாறன். அதிகளவிலான ஸ்டன்ட் காட்சிகளும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற இருக்கிறது.

இதற்காக, ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தென்காசியில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து சென்ற துணை நடிகர்களுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்பும், சம்பளத்தைத் தராததால், அவர்கள் நள்ளிரவில் ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

ஒரு நாளைக்கு ரூ. 500 சம்பளம் எனப் பேசி அவர்களை அழைத்து சென்ற நிலையில், பேசியபடி சம்பளம் கொடுக்காமல் ரூ.350 மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். இதனால், கோபமடைந்த துணை நடிகர்கள் நள்ளிரவில் ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in