சுட சுடப் பல்பைத் திருடி பேன்ட் பாக்கெட்டில் போட்ட போலீஸ்காரர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பல்பைத் திருடும் போலீஸ்காரர்
பல்பைத் திருடும் போலீஸ்காரர்

உத்தரப்பிரதேசத்தில் சீருடை அணிந்த போலீஸ்காரர் ஒருவர், கடையில் எரிந்து கொண்டிருந்த பல்ப்பை திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிக்கந்தபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு போலீஸ்காரர் ஒருவர் தான், இப்போது இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.

சிசிடிவியில் சிக்கிய போலீஸ்காரர்
சிசிடிவியில் சிக்கிய போலீஸ்காரர்

ஒரு கடையின் வெளியே எரிந்து கொண்டிருந்த பல்ப் ஒன்றை சீருடை அணிந்த போலீஸ்காரர், வேகமாக ஏறி திருடி தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கிறார். அத்துடன் எதுவும் நடக்காதது போல செல்போனில் பேசிக் கொண்டு போகிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்த திருட்டுச் சம்பவம் ஏப்ரல் 20-ம் தேதி நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வெளியானதைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ்காரரே திருடுவது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது என்று அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர்களை நம்பி எப்படி வெளியே பொருட்களை வைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், பல்ப் திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை கடும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in