இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ள இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவின் ராகேஷ் சர்மா, சோவியத் விண்வெளி திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு பறந்துச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்திருந்தார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தபோதும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது இத்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இதையடுத்து இந்திய விமான படையை சேர்ந்த 12 வீரர்கள் விண்வெளி செல்லும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. அதில் இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் இறுதிக்கட்ட பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து ரகசியம் காக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த 4 வீரர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சுக்லா ஆகிய 4 பேர் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் விங் கமாண்டர்கள் அல்லது குரூப் கேப்டன்கள் பொறுப்பில் இருந்து வருபவர்கள் ஆவர்.
ககன்யான் திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு ராக்கெட் மற்றும் கேப்ஸியூல் ஆகியவை தயாரிக்கபப்டுகிறது. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்வெளிக்கு பயணித்து, அங்கு 3 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவது திட்டத்தின் நோக்கமாகும்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!
தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!