ஆதார் கார்டைக் காட்டினால் வெங்காயத்தின் விலை 25 ரூபாய் தான்: மாநில அரசு அதிரடி!

வெங்காய மண்டி
வெங்காய மண்டி

வெங்காயம் விலை 80 ரூபாய்  வரை உயர்ந்திருக்கும் நிலையில் பொதுமக்கள்  தங்கள் ஆதார் அட்டையைக் காட்டி 25 ரூபாய்க்கு வெங்காயம் வாங்கிக் கொள்ளலாம் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. 

உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசை பின்பற்றி பஞ்சாப் மாநிலத்தில் இந்த புதிய  திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தக்காளியின் விலை 100 ரூபாயைத் தாண்டிய உச்ச நிலையில் மக்கள் தக்காளி இன்றி சமைக்க நேரிட்டது. அதனால் தமிழக அரசு  மலிவு விலைக்கு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் என்ற விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது. இதையடுத்து தக்காளி விலை குறைந்தது.

தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை  அதிகரித்து வருகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனைத் தடுக்க பஞ்சாப் அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

வெங்காயம்
வெங்காயம்

அதாவது காய்கறி மண்டியில் ஆதார் அட்டையைக் கொண்டு வந்து காட்டினால்,  அவர்களுக்கு மலிவு விலையில் குறைந்த பட்சமாக ரூபாய் 25 ரூபாய்க்கு வெங்காயம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பால் பஞ்சாப் மாநில மக்கள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி மக்கள் பலர் காய்கறி மண்டிக்கு சென்று ஆதார் அட்டையைக் காட்டி  வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.  இந்த திட்டமானது குறிப்பிட்ட சில மண்டிகளில் நடைமுறையில் உள்ள நிலையில் விரைவில் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல இதர மாநிலங்களில்  வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயரும்போது இதே போல திட்டம் கொண்டு வரப்பட்டால் மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in