ஓபிசி பிரிவில் முஸ்லிம்கள்: சமூகநீதிக்கு எதிரானது என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விமர்சனம்!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தின் அனைத்து சாதியினரும் இதர பின்தங்கிய வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்கப்பட்டது சமூகநீதிக்கு எதிரானது என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விமர்சித்துள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதியினரும் சமூக மற்றும் கல்வி ரீதியாக இதர பின்தங்கிய வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது அந்த சமூகத்தினர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் மாநில அரசுப் பணி பதவிகள் மற்றும் காலியிடங்களுக்கான நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பெற உதவும்.

முஸ்லிம் இட ஒதுக்கீடு
முஸ்லிம் இட ஒதுக்கீடு

இந்த வகைப்படுத்துதல் நடவடிக்கை மூலம் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய, பிரிவு 1ல் 17 சாதியினருக்கும், பிரிவு 2-ஏ-ல் 19 சாதியினருக்கும் இடஒதுக்கீடு சலுகைகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகா மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 12.92 சதவீதமாக உள்ளனர்.

இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) வெளியிட்ட அறிக்கையில், "சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு இந்த நடவடிக்கை மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பறிக்கிறது. இது சமூக நீதியின் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சாதிகள் அல்லது சமூகங்களை ஒரு முழு மதத்துடன் சமமாக கருத முடியாது. முஸ்லிம் மதத்தில் சாதி அமைப்பு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், நடைமுறையில் இஸ்லாம் முற்றிலும் சாதியத்திலிருந்து புறக்கணிக்க முடியாததாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. முழு மதத்தையும் பின்தங்கியவர்களாக கருதுவது முஸ்லிம் சமூகத்துக்குள் உள்ள பன்முகத்தன்மையையும், சிக்கல்களையும் புறக்கணிப்பதாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in