பரபரப்பு தீர்ப்பு... கேரளாவில் கணவன், மனைவியை கொலை செய்த வாலிபருக்குத் தூக்குத் தண்டனை!

அர்ஜுன்
அர்ஜுன்

கேரளாவில் இரட்டைக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்து மானந்தவாடியாகும். இந்த ஊரில் உள்ள கல்பற்றா தாலுகா பத்மாலயத்தைச் சேர்ந்தவர் கேசவன்(75). இவரது மனைவி பத்மாவதி(65). இவர்கள் இருவரும் கடந்த 2021 ஜூன் 10-ம் ஆண்டு வீட்டில் முகமூடி அணிந்தவரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கேசவன் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பத்மாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் இறப்பதற்கு முன்பு, முகமூடி அணிந்தவர்களே தனது கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்திரன் தலைமையில் 41 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் உள்பட பலரை விசாரித்தனர். அப்போது சுமார் 1,200-க்கும் மேற்பட்டோரின் கைரேகைகள் சரிபார்க்கப்பட்டு, 1000-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

வயநாடு முதல் தாமரச்சேரி வரையிலான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக போலீஸார் சோதனை செய்தனர். இந்த நிலையில், மூன்று மாதங்கள் கழித்து கேசவனின் பக்கத்து வீட்டுக்காரரான அர்ஜுன் என்ற வாலிபரை செப்டம்பர் 17-ம் தேதி போலீஸ் கைது செய்தனர். கொள்ளை தான் இந்த இரட்டைக்கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி உள்பட 75 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு 179 ஆவணங்களையும், 39 காட்சிப்பொருட்களையும் நீதிமன்றத்தி தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை 2023 டிசம்பரில் நிறைவடைந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அர்ஜுனை குற்றவாளி என அறிவித்தது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், இந்த இரட்டைக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது கொலை செய்ததற்காக அர்ஜுனுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இது தவிர வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. சாட்சியங்களை அழித்ததற்காக அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in