5ஜி மேஜிக்: டெல்லியில் இருந்தபடி ஸ்வீடனில் கார் ஓட்டிய மோடி!

5ஜி மேஜிக்: டெல்லியில் இருந்தபடி ஸ்வீடனில் கார் ஓட்டிய மோடி!

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டெல்லியில் இருந்தபடி ஸ்வீடனில் உள்ள காரை இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ‘இந்திய மொபைல் காங்கிரஸ் -2022’ மாநாட்டை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். 13 முக்கிய நகரங்களுக்கு 5ஜி சேவையையும் அவர் அறிமுகப்படுத்தினார். தீபாவளி பண்டிகையின்போது இந்தியாவின் செல்போன் பயனாளர்கள் 5ஜி சேவையைப் பயன்படுத்த முடியும்.

இந்நிகழ்ச்சியின்போது, எரிக்ஸன் மொபைல் அரங்குக்குச் சென்ற மோடி, அங்கிருந்தபடி ஸ்வீடனில் உள்ள ஒரு காரை 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கி அசத்தினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தக் காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில், ‘உலகத்தை இயக்குகிறது இந்தியா’ எனப் பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்வீடனில், அரங்குக்குள் இருக்கும் அந்தக் கார் தொலைதூரத்திலிருந்து இயக்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in