அருணாச்சல பிரதேசத்தில் பெரும் நிலச்சரிவு... சீன எல்லையை ஒட்டிய திபாங் மாவட்டம் துண்டிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு
அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீன எல்லையை ஒட்டிய திபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம், திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் போது தேசிய நெடுஞ்சாலை 33-ல் ஹுன்லி - அனினி இடையே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியான வீடியோக்கள், நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை துண்டித்து, பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை காண்பிக்கின்றன.

இதன் காரணமாக, வாகனங்கள் மறுபுறம் கடந்து செல்வது தடைபட்டுள்ளது. இந்த கடினமான நிலப்பரப்பின் போக்குவரத்து உயிர்நாடியாக கருதப்படும் நெடுஞ்சாலையை துண்டிக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபாங் மாவட்டத்தின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (என்எச்ஐடிசிஎல்) சேதமடைந்த நெடுஞ்சாலை பகுதிகளை சீரமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

திபாங் மாவட்டம்
திபாங் மாவட்டம்

அதிர்ஷ்டவசமாக திபாங் மாவட்டத்துக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது பற்றாக்குறை எதுவும் இல்லை. சீரமைப்புப் பணிகளுக்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in