வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீச்சு... காங்கிரஸ் தொண்டரை அடித்து உதைத்த பிஜேடி தொண்டர்கள்; அதிர்ச்சி வீடியோ!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன், 5டி திட்ட தலைவர் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன், 5டி திட்ட தலைவர் வி.கே.பாண்டியன்

ஒடிசாவில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே பாண்டியன் மீது தக்காளியை வீசி தாக்குதல் நடத்திய நபரை, பிஜேடி தொண்டர்கள் அடித்து உதைத்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாக கொண்ட வி.கார்த்திகேய பாண்டியன் கடந்த 1999ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் செயலாளராகவும், முதலமைச்சரின் மாற்றத்திற்கான முன்னோடி திட்டங்களில் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு அவர் ஐஏஎஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து மாநில கேபினட் அமைச்சர் பொறுப்பு கொண்ட 5டி திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் அவர் அதிகாரப்பூர்வமாக பிஜூ ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். வி.கே.பாண்டியனுக்கு அடுத்தடுத்து பதவிகள் வழங்கப்பட்டு வருவதும், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதற்கும் மாநிலத்தில் உள்ள பிற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022ம் ஆண்டு அவரது வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்றது. அதேபோல் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தபோது அவர் மீது கருப்பு மை வீசி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசியவர் மீது பிஜேடி தொண்டர்கள் சரமாரி தாக்குதல்
வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசியவர் மீது பிஜேடி தொண்டர்கள் சரமாரி தாக்குதல்

இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கன்ஜம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வி.கே.பாண்டியன் பங்கேற்று இருந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென அவர் மீது தக்காளி ஒன்றை வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தக்காளி வீசியவரை பிடித்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் அடித்து உதைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அந்த நபரை போலீஸார் கட்சியினரிடமிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசியவர் மீது பிஜேடி தொண்டர்கள் சரமாரி தாக்குதல்
வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசியவர் மீது பிஜேடி தொண்டர்கள் சரமாரி தாக்குதல்

விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளானவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், பிஜூ ஜனதா தளம் கட்சி மற்றும் 5டி திட்டத்தின் தலைவரான வி.கே பாண்டியன் ஆகியோர் மீது பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அதிருப்தியில் இருந்ததால், தக்காளியை வீசியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி சுருட்டல்!

கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!

ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சூப்பர் ஸ்பீடு விஜய்... இன்னும் 10 நாளில் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in