வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை உற்று நோக்கி வருவதாகவும் அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து   கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in