வரலாற்றில் இடம் பிடித்த திருமணம்... மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியின் கரம் பிடித்த காதலன்!

வரலாற்றில் இடம் பிடித்த திருமணம்... மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியின் கரம் பிடித்த காதலன்!

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் குளிர் நிறைந்த பனிப் பிரதேசத்தில் ஒரு காதல் ஜோடி  திருமணம் செய்து கொண்டுள்ளது வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் தற்போது மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் நிலவி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த இடத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஜோடி ஆசைப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த  அஜய் பன்யால் என்பவர் தனது காதலியின் விருப்பத்தின் பேரில் இங்கு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். யாரும் செல்லாத பகுதியில் சென்று  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது காதலி விரும்பினாராம்.

அதையடுத்து மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அலங்கார மேடை அமைத்து இந்து முறைப்படி காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். இமாசலப் பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால், கடும் குளிரில் நடைபெற்ற திருமண வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இதுபோன்றும் திருமணம் நடைபெறும். காதலர்களின் ஆசை நிறைவேறிய தருணம். காதலியின் விடாமுயற்சியால், குஜராத்தைச் சேர்ந்த காதலர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் மைனஸ் 25 டிகிரி வெப்பநிலையிலும் திருமணம் செய்துகொண்டனர்.

இங்கு இதுபோன்று திருமணம்  நடப்பது இதுவே முதல்முறை. ஸ்பிட்டி மாவட்டத்தின் மூராங் பகுதியில் நேற்று காலை இந்த அற்புதமான திருமணம் நடைபெற்றது. நெடுந்தூரம் பணித்து தனித்துவமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸ்பிட்டி மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் தாங்களும் இதுபோன்று அந்த பகுதியில் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!

அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in